2010-06-17 15:07:35

இத்தாலியில் திருத்தந்தை புனித ஐந்தாம் செலெஸ்தின் என்ற திருத்தந்தையின் புனித பண்டங்களுக்கு வணக்கம் செலுத்துவார்


ஜூன்17,2010 இத்தாலியில் 2009ம் ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Abruzzi பகுதிக்கு வரும் ஜூலை மாதம் திருத்தந்தை சென்று அங்குள்ள புனித ஐந்தாம் செலெஸ்தின் என்ற திருத்தந்தையின் புனித பண்டங்களுக்கு வணக்கம் செலுத்துவார் என்று திருப்பீட பத்திரிக்கை அலுவலகம் கூறுகிறது.
13ம் நூற்றாண்டில் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாம் செலெஸ்தின், ஐந்து மாதங்களே திருத்தந்தையாக இருந்த பின்னர் அந்தப் பொறுப்பைத் துறந்து, ஒரு துறவியாக வாழ்நாட்களைக் கழித்தார் என்பது வரலாறு.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Abruzzi பகுதியில் உள்ள L’Aquila நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அந்தப் பகுதிக்கு அவ்வாண்டு ஆகஸ்ட் மாதமே சென்றதோடு, அந்த ஆண்டை புனித செலெஸ்தின் ஆண்டாக அறிவித்தார். இந்த ஜூபிலி ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வருவதையொட்டி, திருத்தந்தை இப்பயணத்தை மேற்கொள்வார் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பு கூறுகிறது.திருத்தந்தை மே மாதம் தொரினோவுக்கு மேற்கொண்ட பயணம் உட்பட, இவ்வாண்டு இத்தாலியின் நான்கு இடங்களுக்கு மெய்ப்புப் பணிக்கான திருப்பயணங்களை மேற்கொள்வார் என்று இச்செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.