சூதாட்ட மையங்களைத் திறப்பதற்கான அரசு திட்டங்களைக் கிடப்பில் போடவேண்டுமென பிலிப்பின்ஸ்
ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்
ஜூன்16,2010 சூதாட்ட மையங்களைத் திறப்பதற்கான அரசு திட்டங்களைக் கிடப்பில் போடவேண்டுமென
பிலிப்பின்ஸ் ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தற்போது பிலிப்பின்ஸில் உள்ள சூதாட்ட
மையங்களைச் சட்டப் பூர்வமாக நிறுத்த முடியவில்லை என்ற நிலையில், புதிதாக அம்மையங்களைத்
திறக்காமல் இருக்கவாகிலும் அரசு முயல வேண்டும் என்று ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பிலிப்பின்ஸ்
நாட்டின் Urdaneta பெருநகரில் சூதாட்ட மையத்தைத் திறக்க அரசு திட்டமிட்டு வரும் வேளை,
இது போன்ற அரசின் நடவடிக்கைகளால், பல ஏழை மக்களின் வாழ்வு இன்னும் ஏழ்மை அடைய வழி வகுக்கும்
மற்றும் நாட்டில் இன்னும் ஊழல் பெருகவும் இது வாய்ப்பாகும் என்று அந்தப் பகுதியில் உள்ள
ஏழு ஆயர்கள் வெளியிட்டுள்ள சுற்று மடலில் கூறியுள்ளனர்.சூதாட்டமும், நேரிய நன்னடைத்தையும்
ஒரு சேர வளர முடியாது என்று உரைத்த ஆயர்கள், சூதாட்டங்களால் குடும்பங்களில் சண்டைகள்,
பிரிவுகள் ஏற்படவும், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் வழிகளால் இளையோரிடையே கடின
உழைப்பு குறையவும் வழியாகும் என்ற தங்கள் கவலைகளை தெரிவித்துள்ளனர்.