2010-06-15 16:13:01

ஜூன், 16 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1846 - ஒன்பதாம் பத்திநாதர் என்ற திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறத்தாழ 32 ஆண்டுகள் பாப்பிறையாக இருந்த இவர், பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிக அதிக காலம் பொறுப்பில் இருந்த திருத்தந்தையாகக் கருதப்படுகிறார்.
1897 - ஹவாய்க் குடியரசை அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் இணைக்கும் உடன்பாடு நிறைவேற்றப்பட்டது.
1940 - லித்துவேனியாவில் கம்யூனிச ஆட்சி உருவானது.
1963 - உலகின் முதலாவது பெண் விண்வெளி வீரராக ரஷ்யாவின் வலன்டீனா டெரெஷ்கோவா, ‘வோஸ்டோக் 6’ என்ற விண்கலத்தில் பயணமானார்.1976 - தென்னாப்பிரிக்காவில் சுவெட்டோவில் 15,000 கறுப்பின மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 566 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.