வெற்றி அடைபவர்கள் சாதாரண மனிதர்கள். பெரும் திட்டங்களோடு பிறப்பவர்கள் அல்ல. அதிர்ஷ்டங்களுடன்
வளர்பவர்களல்ல. ஒவ்வொரு நாளையும் வீரத்தோடு, உறுதியோடு சந்திப்பவர்கள். ‘முடியாது’
என்ற சொல்லை மூட்டை கட்டி வைப்பவர்கள். மற்றவர்கள் ‘முடியாது’ என்று விட்டுச் சென்ற
வேலையைச் செய்வதற்குத் துணிபவர்கள். எண்ணங்களை, மனதை, உடல் உழைப்பைத் தயக்கமின்றி
பயன்படுத்துபவர்கள். இவர்கள் சாதாரண மனிதர்கள்.அசாதாரண வெற்றி அடைபவர்கள்.