2010-06-09 15:47:52

நான்கு பொது நிலையினர் உட்பட ஒன்பது பேர் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர்


ஜூன்09,2010 ஸ்லோவேனியாவில் இறை சாட்சியாக உயிர் துறந்த 19 வயது இளைஞன், இத்தாலியின் 18 வயது பெண் உட்பட ஒன்பது பேர் வரும் மாதங்களில் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர் என்று திருப்பீடம் அறிவித்தது.
இச்செவ்வாயன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அளித்த ஒப்புதலுடன் வெளியான இந்தச் செய்தியில், நான்கு பொது நிலையினர் உட்பட ஒன்பது பேர் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளராகப் பணி புரிந்த ஸ்பெயினைச் சார்ந்த Manuel Lazano Garrido இச்சனிக் கிழமையன்று ஸ்பெயினில் Linares நகரிலும், அதற்கடுத்த நாள் ஞாயிறன்று ஸ்லோவேனிய இளைஞன் Lojze Grozde, Celje நகரிலும் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர்.Lebanon நாட்டைச் சேர்ந்த Stephen Nehme, ஸ்பெயின் நாட்டினர்களான கப்பூச்சின் சபை சகோதரர் Leopoldo Sanchez Marquez de Alpandeire, திருச்சிலுவை சகோதரிகள் சபையின் Maria de la Immaculada Conepcion, இத்தாலியர்களான Chiara Badano என்ற இளம்பெண், அமல மரி பணியாளர்களின் சபையைத் தோற்றுவித்த Anna Maria Adorni, ரோமேனியாவின் ஆயரும் மறை சாட்சியுமான Szilard Bogdanffy, மரியாவின் தூய இதய சகோதரிகள் சபையை நிறுவிய பிரேசில் நாட்டு Maria Barbara, ஆகியவர்கள் முத்திபேறு பெற்றவர்களாக வரும் மாதங்களில் உயர்த்தப்படுவர் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.