2010-06-09 15:17:45

ஜூன் 10 – நாளும் ஒரு நல்லெண்ணம்


"கற்றுது கை மண் அளவு கல்லாதது உலகளவு"

கற்க வேண்டியது உலகளவு என்றுதான் இருந்திருக்கவேண்டும்.

அறிவு என்பது இன்று எதை வைத்துக் கணிக்கப்படுகிறது?

கற்ற கல்வியாண்டுகளின் எண்ணிக்கையைப் பார்த்துத்தான்

அறிவையும் மதிப்பையும் கணக்கிடுவது வழக்கமாகிவிட்டது.

நம் தமிழக முதல்வர்களுள் பலர் பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரியில் காலடி எடுத்து வைக்காதவர்கள். இருப்பினும் நிர்வாகத் திறமைக்கு அது தடையாக இருந்ததில்லை.

கல்வியறிவு என்பது அறிவைப்பெற நமக்கு கிடைத்துள்ள எத்தனையோ வழிகளுள் ஒன்றுதான்.

அறிவு என்பது உணர்தலாலும், அனுபவத்தாலும், கற்பதாலும் கிடைக்கப்பெறுவதாகும். அறிவு என்பது ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை கிடைத்துக் கொண்டேயிருப்பது. கல்விக் கூடங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே அறிவு இருப்பது போன்றும், அறிஞர்கள் என்றும், ஒரு தவறான எண்ணம் பொதுவாக பலரிடம் உள்ளது. அறிவு என்பது எல்லாருக்கும் உண்டு, மனிதரல்லாத விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை இயற்கையறிவு, உணர்வறிவு, படிப்பறிவு, பட்டறிவு, கல்வியறிவு, தொழில்சார் அறிவு, துறைச்சார் அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, ஆள்மனப்பதிவறிவு என பல்வேறு வகைகளாகப் பிரிக்கின்றனர்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் கிட்டும் அறிவை ஒன்றாய் ஒருங்கமைத்து வயதிற்கேற்றார்போல் வடிவமைத்துத் தருவதுதான் பள்ளி, கல்லூரிகள் முன் நிற்கும் சவால்.








All the contents on this site are copyrighted ©.