2010-06-09 15:51:20

சபையின் கொள்கைகளையும், முடிவுகளையும் மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை - காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர்


ஜூன்09,2010 தங்கள் சபையின் கொள்கைகளையும், முடிவுகளையும் மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று எகிப்திலுள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர் கூறியுள்ளார்.
முஸ்லீம்கள் பெருவாரியாக உள்ள எகிப்து நாட்டில் கடந்த வாரம் அங்குள்ள நீதி மன்றம் ஒன்று காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்த இருவருக்கு மறுமணம் செய்து கொள்ளும் அதிகாரம் வழங்கியதை அடுத்து, அங்குள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவரான Shenouda மற்றும் அச்சபையின் 90 அதிகாரிகள் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நீதி மன்றத்தின் தீர்ப்பைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.

இஸ்லாமிய அடிப்படை வாதம் பரவி வரும் இக்காலத்தில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபை தன் கொள்கைகளை ஆதரித்து, நீதி மன்றத்தை எதிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சட்டங்களை மதிப்பது தங்கள் கடமை என்றாலும், விவிலியம் கூறும் சட்டங்களே காப்டிக் சபையின் அடிப்படையாகும் என்று தலைவரான Shenouda கூறினார்.எகிப்தில் வாழும் 7 கோடியே 80 லட்சம் மக்களில் 10 விழுக்காடு கிறிஸ்துவர்கள். அந்தக் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்தவர்கள்.







All the contents on this site are copyrighted ©.