வால்ட் டிஸ்னியின் அற்புதமான கற்பனையில் உருவான ஒரு நகைச்சுவை உருவம் Donald Duck. இந்த
நகைச்சுவை உருவம் முதன் முறையாக 1934ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
Donald Duck, Mickey Mouse போன்ற பல நகைச்சுவை கதாபாத்திரங்களை உருவாக்கிய வால்ட் டிஸ்னி
கனவுகளுக்கு, குழந்தைகளுக்குத் தன் வாழ்வில் தனியொரு இடம் கொடுத்தார். கனவுகளைப் பற்றி
அவர் சொன்ன இரு கூற்றுகள்:
நீ ஒன்றை கனவு காண முடிந்தால், அதை உருவாக்கவும்
முடியும். கனவுகளைத் தொடர்வதற்கு வீரம் இருந்தால், அவைகள் நனவாகும்.
வால்ட்
டிஸ்னியின் கனவுகள் பல அவர் உண்டாக்கிய கனவுத் தொழிற்சாலையான வால்ட் டிஸ்னி திரைப்பட
நிறுவனத்தின் மூலம் இன்றும் வெளி வந்த வண்ணம் உள்ளன. குழந்தைகளைப் பற்றி அவர் சொன்ன
ஒரு அழகிய கூற்று:
இயற்கை நமக்களித்த செல்வங்களிலேயே மிகவும் விலைமதிப்பற்ற
செல்வம் நம் குழந்தைகளின் அறிவுத் திறன்.