2010-06-08 16:11:29

இந்தோனேசியாவில் கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்படுதல் குறித்து கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள்


ஜூன்08,2010 இந்தோனேசியாவில் கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்படுதல் மற்றும் மதசகிப்பற்றத் தன்மைகளின் ஏனைய வெளிப்பாடுகள் குறித்து கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள்.
அமைதிக்கான மதங்களின் இந்தோனேசிய அவையின் பொதுச்செயலர் தியோஃபிலஸ் பெலா உரைக்கையில், இதுவரை இந்தோனேசியாவில் தாக்கப்பட்ட, மூடும்படிக் கட்டாயப்படுத்தப்பட்ட, மத வழிபாடுகளுக்கான அனுமதி புதுப்பிக்கப்பட மறுக்கப்பட்ட கோவில்கள் குறித்த விவரங்களை அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிகாரி மரியா ஒட்டேரோ உடன் ஆன சந்திப்பின் போது சமர்ப்பித்துள்ளதாகக் கூறினார்.
இந்தோனேசிய மத சமூகங்களிடையே நல்லுறவை ஊக்குவிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிகாரிகள் உதவுவார்கள் என தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார் கத்தோலிக்கரான பெலோ.
2009ம் ஆண்டிலிருந்து இதுவரை 30 கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன அல்லது மூடப்பட அச்சிறுத்தப்பட்டுள்ளன எனவும் கூறினார் அவர்.இந்தோனேசியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரானத் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்வதாகவும் கவலையை வெளியிட்டார் பெலோ.







All the contents on this site are copyrighted ©.