2010-06-07 16:05:02

நேபாளத்தில் தலத்திருச்சபையின் உதவியுடன் புதிய கிறிஸ்தவ ஐக்கிய அவை


ஜூன்07, 2010 பொதுநல தேசிய விவகாரங்களில் ஒன்றிணைந்த உறுதியான கிறிஸ்தவக் குரலுக்கு வழிவகுக்கும் என்ற நோக்குடன், நேபாளத்தின் கத்தோலிக்கத் திருச்சபை அந்நாட்டின் ஏனையக் கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து புதிய கிறிஸ்தவ ஐக்கிய அவை ஒன்றை உருவாக்கியுள்ளது.
நேபாள கத்தோலிக்கத் திருச்சபையோடு இணைந்துப் பணியாற்ற அந்நாட்டின் 9 கிறிஸ்தவ அமைப்புகள் கையெழுத்திட்டுள்ள அதேவேளை, ஏனைய இரண்டு அமைப்புகள் விரைவில் இணைய உள்ளதாகவும் அதுவரை முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளன.
உள்நாட்டு நிதி உதவிகளுடனேயே செயல்பட உள்ள இவ்வவையில் ஒருங்கமைப்பாளர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவர்.அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூகத்தொடர்பு நிறுவனங்களிடம் உரையாடும்போது ஒருமித்த குரலில் கருத்துக்களை முன் வைப்பது பயன் தருவதாய் அமையும் என்ற நோக்கில் இவ்வவை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.