2010-06-06 14:51:28

ஜூன் 07. நாளும் ஒரு நல்லெண்ணம்.


மனது அவ்வப்போது அடித்துக்கொள்கிறது, அடித்துக் கொல்கிறது.

ஏன் எனக்கு மட்டும் இத்தனை வேதனைகள் என்று.

எனக்கு மட்டும் தான் என்பது பொய்யெனினும் அதில்தான்

ஒரு சுகம் தேடுகிறது மனம்.

நண்பர்களும் உறவினர்களும் என்னைச் சுற்றி வருவதெல்லாம்

தங்கள் லாபத்திற்காகவே என எண்ணத் தோன்றுகின்றது.

ஓட்டாண்டியாய் நானிருந்தால் ஒட்டுவார்களா என சந்தேகம் எழுகின்றது.

யாரைப் பார்த்தாலும் அச்சமாய் இருக்கிறது.

ஏதோ லாபம் கருதித்தான் வருகிறார்கள் எனத் தோன்றுகிறது.

எல்லோரும் என்னைப்பொறுத்தவரையில் சுயநலக்காரர்கள் என

எண்ணுவதன் காரணம் என்ன?

மற்றவர்களுக்கு நான் யாராயிருக்கிறேன் என்பதை

இதுவரை எண்ணிப் பார்க்காததோ?








All the contents on this site are copyrighted ©.