2010-06-03 14:59:25

புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டிற்குள் இரு மடங்காக உயரும் - ஐக்கிய நாட்டு உலக நல நிறுவனம் அறிவிப்பு


ஜூன்03,2010 உலகில் புற்று நோயினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டிற்குள் இரு மடங்காக உயரும் என்று ஐக்கிய நாட்டு உலக நல நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது.
புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அகில உலக நிறுவனமான IARC இப்புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2008 ஆண்டில் உலகில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 1,27,00000 என்றும் இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டில் 2,14,00000 என்ற அளவு உயரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.நுரையீரல், வயிறு, மார்பகம் ஆகியற்றில் ஏற்படும் புற்று நோய்களே மிக அதிகமாகக் காணப்படுகின்றன என்று கூறும் இவ்வறிக்கை, உலகில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 50 விழுக்காடு ஐரோப்பாவில் உள்ளனர் என்றும், இதற்கு அடுத்தபடியாக தென் அமேரிக்கா, ஆசியா அகிய பகுதிகளில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என்றும் உலக நல நிறுவனத்தின் இவ்வறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.