2010-06-03 14:56:34

திருத்தந்தையின் திருப்பயணம் ஒரு மைல் கல் என்கிறார் சைப்ரஸ் நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர்


ஜூன்03,2010 மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான அமைதியின் பாதையில் திருத்தந்தையின் திருப்பயணம் ஒரு மைல் கல்லாக அமையும் என தன் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் சைப்ரஸ் நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் அந்தோனியோ ஃப்ராங்கோ.
இவ்வெள்ளியன்று துவங்கும் சைப்ரஸ் நாட்டிற்கான திருத்தந்தையின் மூன்று நாள் திருப்பயணம் குறித்து பேட்டியளித்த அந்நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர், அந்நாட்டில் புனிதர்கள் பவுல் மற்றும் பர்னபாஸின் பாதச்சுவடுகளில் இடம்பெற உள்ள திருத்தந்தையின் இம்மேய்ப்புப்பணித் திருப்பயணம், அமைதி முயற்சிகள் நற்கனிகளைத் தரவும் சைப்ரஸ் தீவின் ஐக்கியம் மீண்டும் கொணரப்படவும் உதவும் என நம்புவதாகக் கூறினார்.கிறிஸ்தவ ஐக்கியப் பேச்சுவார்த்தைகளுக்கான முக்கியத்துவத்தின் சாட்சியாகவும், சைப்ரஸின் இரு கத்தோலிக்க சமூகங்களுக்கும் ஆறுதல் அரவணைப்பைத் தருவதாகவும், மத்தியக்கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் பேரவைக்கான பாதையில் ஒரு கலங்கரை விளக்காகவும் திருத்தந்தையின் இத்திருப்பயணம் இருக்கும் என மேலும் கூறினார் சைப்ரஸிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் ஃப்ராங்கோ.







All the contents on this site are copyrighted ©.