2010-06-02 16:00:38

ஆகத்தா புயலின் பாதிப்புகளைச் சீரமைக்கும் பணியில் அரசுடன் இணைந்து திருச்சபை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்


ஜூன்02, 2010 மத்திய அமெரிக்காவை கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் தாக்கிய ‘ஆகத்தா’ என்ற புயலின் பாதிப்புகளைச் சீரமைக்கும் பணியில் அந்த நாடுகளின் அரசுடன் இணைந்து திருச்சபை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
150 பேருக்கு மேல் உயிர் இழந்துள்ள இந்தப் புயலினால் கவுத்தமாலா நாடு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதெனவும் பல்லாயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
இந்த நாட்டில் கடந்த வாரம் மட்டும் இரு பெரும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டுளதெனவும், மே மாதம் 27 ஏற்பட்ட எரிமலை சீற்றத்திலிருந்து மக்கள் மீண்டு வரும் இந்த வேளையில் இந்தப் புயல்காற்று மக்களை இன்னும் அதிகம் பாதித்துள்ளதெனவும் Escuintla மறைமாவட்டத்தைச் சார்ந்த அருட் தந்தை Eleuterio Cojon கூறினார். தங்கள் உடைமைகள், வீடுகள், அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் அனைத்தையும் இழந்துள்ள நிலையில் இம்மக்கள் பெரிதும் நம்பிக்கை இழந்துள்ளனர் என்று அருட் தந்தை Cojon மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.