2010-06-02 15:59:54

தன்னைக் கொல்ல முயன்ற மனிதரைத் தான் மன்னிப்பதாகக் கூறினார் வாழும் கலை இயக்கத்தின் தலைவர்


ஜூன்02, 2010 தன்னைச் சுட்டுக் கொல்ல முயற்சி செய்த மனிதரைத் தான் மன்னிப்பதாகக் கூறினார் வாழும் கலை இயக்கத்தின் (Art of Living Foundation) தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
ரவிசங்கர் தாக்கப்பட்டதை வன்மையாய் கண்டித்த பெங்களூர் பேராயர் பெர்னார்ட் மொராஸ், சமாதானத்தையும், வன்முறையற்ற சமுதாயத்தையும் உருவாக்கப் பாடுபடும் நல்லோர் எக்காரணம் கொண்டும் தாக்கப்படக்கூடாதெனக் கூறினார்.
இயேசு சபையினர் நடத்தும் புனித ஜோசப் கல்லூரியின் முன்னாள் மாணவரான ரவிசங்கர் தன்னைத் தாக்கியவரை மன்னித்துள்ளார் என்பதைப் பெரிதும் பாராட்டிய கர்நாடக கத்தோலிக்கத் திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை Faustine Lobo, மத வழிபாட்டுத் தலங்கள், மதத் தலைவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்கு அரசு இன்னும் அதிகம் முயற்சிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.கடந்த ஞாயிறன்று நடந்த இந்தத் தாக்குதலில் ரவிசங்கருக்கு வைத்த குறி தவறி அருகிலிருந்த ஒருவரைக் காயப்படுத்தியது என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.