2010-06-02 16:00:24

சுற்றுச் சூழல் மாற்றங்கள் அனைவரும் சேர்ந்து சந்திக்க வேண்டிய ஒரு சவால் - கம்போடிய காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி


ஜூன்02, 2010 சுற்றுச் சூழல் மாற்றங்கள் அனைவரும் சேர்ந்து சந்திக்க வேண்டிய ஒரு சவால் என்று காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறினார்.
இச்செவ்வாயன்று கம்போடியாவின் Phnom Penhல் கம்போடிய அரசு, அரசு சாரா அமைப்புகள், கம்போடிய காரித்தாஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்கின் போது காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி Sok Sakhan இவ்வாறு கூறினார்.
கம்போடிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் உதவிகளுடன் இயங்கும் காரித்தாஸ் அமைப்பு, மத பின்னணிகளைத் தாண்டி தேவையுள்ள அனைத்து மக்களுக்கும் உதவி செய்து வருவதாக காரித்தாஸ் அதிகாரி மேலும் கூறினார்.கம்போடியா வளர்ந்து வரும் நாடு என்பதால் சுற்றுச்சூழல் மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுகிறதென்றும் காரித்தாஸ் போன்ற அமைப்புகளின் உதவியால் இந்தச் சவால்களை அரசு சந்திக்க முடிகிறதென்றும் கம்போடிய சுற்றுச் சூழல் துறையைச் சார்ந்த Ou Sunvann செய்தியாளர்களிடம் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.