2010-06-01 10:54:57

ஜூன் 02 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1882 - நவீன இத்தாலியை உருவாக்கிய ஜூசப்பே கரிபால்டி இறந்தார்

1896 - மார்க்கோனி தான் புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.

1924 – அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்த அனைத்து பழங்குடி மக்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கும் சட்டமூலத்தை அதிபர் கால்வின் கூலிட்ஜ் அறிமுகப்படுத்தினார்.

1946 - இத்தாலியில் முடியாட்சியை குடியரசாக மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மன்னன் நாட்டை விட்டு வெளியேறினான்.

1953 - இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டு விழா முதற்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது.

1966 - நாசாவின் சேர்வேயர் 1 (Surveyor1) விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.

1999 - பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.