2010-06-01 13:10:44

சுவாசிலாந்தின் அரசியல் நெருக்கடிகளைக் களைய தென் ஆப்ரிக்க ஆயர் அழைப்பு.


ஜூன் 01, 2010. சுவாசிலாந்தில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடிகளைக் களைய தென்னாப்ரிக்க அரசுத்தலைவர் தலையிட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் தெற்கு ஆப்ரிக்க நாடுகளின் ஆயர் பேரவைத்தலைவர்.

மன்னருக்கு எதிரான போராட்டக்காரர் ஒருவர் தடுப்புக்காவலில் உயிரிழந்ததுப் பற்றிக் குறிப்பிட்ட பேராயர் Buti Tlhagale, சுவாசிலாந்து நாட்டில் அரசு அடக்கு முறைகள் அதிகரித்துள்ளதாக கவலையை வெளியிட்டார்.

அரசியல் நடவடிக்கையாளர்கள் பலர் சுவாசிலாந்திலிருந்து தென் ஆப்ரிக்கவுக்குள் நுழைவது அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் Buti Tlhagale.

சுவாசிலாந்தின் அனைத்துத் தரப்பினரிடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க தென்னாப்ரிக்க அரசுத்தலவர் Jacob Zuma நடுநிலையாளராகச் செயல்பட வேண்டும் என தான் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறினார் அவர்.

இதற்கிடையே, மொத்த மக்கள் தொகையான 10 இலட்சத்தில் மூன்றில் இரு பகுதியினர் ஏழ்மையில் வாடும் சுவாசிலாந்தில், மன்னராட்சிக்கு எதிரான எவ்வித எதிர்ப்பும் அனுமதிக்கப்படுவதில்லை என்கிறது ஐ.நா. நிறுவனம்.








All the contents on this site are copyrighted ©.