2010-05-31 13:13:13

ஜூன் 01 நாளும் ஒரு நல்லெண்ணம்


தத்துவஞானி பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் என்பவர் இருபதாம் நூற்றாண்டு பிரித்தானிய மெய்யியலாளர், கணித மேதை, தருக்கவாதி, சமூக சீர்திருத்தவாதி, அமைதிவாதி. இவர் ஒருசமயம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் முடித்துவிட்டுத் தாய்நாட்டுக்குத் திரும்பினார். விமான நிலையத்தில் பரிசோதனை அதிகாரி அவரிடம், உங்களிடம் விலைமதிப்புள்ள பொருட்கள் என்னென்ன வைத்திருக்கிறீர்கள், எடுத்துக்காட்டுங்கள் என்று அதிகாரத்துடன் கேட்டார். அதனைக் கேட்ட பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கோபப்படவில்லை. புன்முறுவலோடு பதில் சொன்னார் – என்னிடம் இருக்கிற விலைமதிப்புள்ள ஒரே பொருள் என் அறிவுதான். அதை நீங்கள் பறிமுதல் செய்ய முடியாது என மிக அடக்கத்துடன் கூறினார். அடக்கம் அமரர்உள் உய்க்கும்; அடங்காமை

ஆர்இருள் உய்த்து விடும்.








All the contents on this site are copyrighted ©.