2010-05-29 15:16:25

மே 30 வரலாற்றில் இன்று


1431 - பிரெஞ்சு வீராங்கனையான 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க், ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.

1815 - இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் (Arniston) என்ற கப்பல் தென்னாப்ரிக்காவுக்கு அருகில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் கொல்லப்பட்டனர்.

1845 - டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு (Trinidad, Tobago) முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்.

1971 - செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1987 - கோவா தனி மாநிலமாகியது.

1989 – சீனாவின் தியானன்மென் (Tiananmen) வளாகத்தில் 33 அடி உயர ஜனநாயகத் தேவதை சிலையை போராட்ட மாணவர்கள் திறந்தனர்








All the contents on this site are copyrighted ©.