2010-05-26 15:12:09

ஆப்கானிஸ்தானில் 28 விழுக்காட்டு மக்களுக்கு மட்டுமே எழுத வாசிக்கத் தெரியும், சி.ஆர்.எஸ் அறிவிப்பு


மே26,2010 ஆப்கானிஸ்தானின் முப்பது வருடச் சண்டை மற்றும் தலிபானின் அடக்குமுறை ஆட்சிக்குப் பின்னர் தற்சமயம் அந்நாட்டில் 28 விழுக்காட்டு மக்களுக்கு மட்டுமே எழுத வாசிக்கத் தெரியும், இவர்களில் 18 விழுக்காட்டினர் பெண்களும் சிறுமிகளும் என்று CRS என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க நிவாரண அமைப்பு அறிவித்தது.

2001ம் ஆண்டில் தலிபான் ஆட்சி வீழ்ந்ததற்குப் பின்னர் 65 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் பள்ளிகளில் பெயர்களைப் பதிவு செய்தனர், இவர்களில் ஏறத்தாழ மூன்றி்ல் ஒரு பகுதியினர் சிறுமிகள் என்று ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் CRS ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தனர்.

ஆப்கானிஸ்தானிலுள்ள 400 CRS அலுவலகர்களில் 96 விழுக்காட்டினர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.








All the contents on this site are copyrighted ©.