2010-05-26 15:10:09

16ம் நூற்றாண்டு வானியியல் நிபுணர் கோப்பர்நிக்குசை கௌரவித்துள்ளது திருச்சபை


மே26,2010 திருச்சபையால் தப்பறையாளர் என்று கண்டனம் செய்யப்பட்ட 16ம் நூற்றாண்டு வானியியல் நிபுணர் நிக்கோலாஸ் கோப்பர்நிக்குசின் உடலை அவர் இறந்த ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்குப் பின்னர் போலந்து பேராலயத்தில் மீண்டும் நல்லடக்கம் செய்துள்ளது திருச்சபை.

புகழ்பெறாத கல்லறை ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கோப்பர்நிக்குசின் உடலை எடுத்து வடபோலந்திலுள்ள Frombork பேராலயத்தில் பொதுநிலை விசுவாசிகள், குருக்கள் எனப் பலர் கூடி இச்சனிக்கிழமையன்று அடக்கம் செய்தனர்.

1473ம் ஆண்டு முதல் 1543ம் ஆண்டுவரை வாழ்ந்த கோப்பர்நிக்குஸ், பூமி சூரியனைச் சுற்றுகிறது என்ற புரட்சிகரமான கோட்பாட்டை வெளியிட்டார். இதனால் அக்காலத்திய திருச்சபையினால் கண்டனம் செய்யப்பட்டிருந்தார்.

தொலைநோக்குக் கருவிகள் கண்டுபிடிக்கப்படாத அக்காலத்தில் இவரின் கணித அறிவு விண்கோள்களை இவர் பார்த்த விதம் ஆகியவை மூலம் இந்தக் கோட்பாட்டை வெளியிட்டார். இவரின் இக்கொள்கையானது, நவீன அறிவியல் யுகத்திற்குப் பெரும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.