2010-05-25 13:49:12

மே 26 நாளுமொரு நல்லெண்ணம்


சோகமாகக் காணப்பட்ட அந்த இளைஞன் உளவியல் மருத்துவரிடம் சென்றான். அவன் கையில் சிகரெட் பெட்டி இருந்தது. கழுத்தில் மணி தொங்கிக் கொண்டிருந்தது. கிழிந்து போன முனையை உடைய பெல்பாட்டம் அணிந்திருந்தான். கழுத்துவரை தொங்கும் முடியுடன் அவன் தோற்றமளித்தான். அந்த மனநல மருத்துவர் அவனிடம், நீ ஹிப்பி இல்லை என்று கூறுகிறாய். ஆனால் உன்னுடைய உடையையும் தலைமுடியையும் தோற்றத்தையும் பார்த்தால் அப்படித்தானே தெரிகிறது? என்று கேட்டார். அதற்கு அவன், அதனால்தான் உங்களிடம் வந்திருக்கிறேன் என்றான்.

கல்வியைக் கற்றுக் கொள்பவன் கல்விமான்.

மற்றவர்களைப் புரிந்து கொள்பவன் அறிஞன்.

தன்னைப் புரிந்து கொள்பவன் ஞானி என்றார் மறைந்த சேசு சபை அருட்தந்தை டோனி டி மெல்லோ







All the contents on this site are copyrighted ©.