2010-05-24 15:00:18

மே 25 நாளும் ஒரு நல்லெண்ணம்


அந்த மாலைப் பொழுதில் இரண்டு பறவைகள் இனிமையான குரல் எழுப்பிக் கொண்டு வானத்தில் பறந்து கொண்டிருந்தன. வீடு திரும்பும் நேரம் அது. அந்நேரத்தில் ஒரு பறவை சொன்னது - ஒருநாள் அந்த நிலவில் நாம் கால் பதிக்க வேண்டும் என்று. இதற்கு அடுத்த பறவையும் சம்மதம் தெரிவித்தது. ஒருநாள் அந்த இரண்டு பறவைகளும் பல தயாரிப்புக்களுடன் நிலவை நோக்கித் தங்களது இலட்சியப் பயணத்தைத் தொடங்கின. மேலே உயரச் செல்லச் செல்ல களைப்படைந்த அந்தச் உடன்பறவை, தான் இந்தப் பயணத்தைத் தொடரப் போவதில்லை என்று சொல்லி பின்வாங்கிவிட்டது. ஆனால் அந்தப் பறவையோ உயிர் போனாலும் பரவாயில்லை, தனது இலட்சியத்தை அடைந்தே தீருவேன் என்ற உறுதியோடு பயணத்தைத் தொடர்ந்தது. முடிவில் நிலவில் காலையும் பதித்தது.

ஆம். இலட்சியமும் துணிவும் நமது குருதியோடு இரண்டறக் கலந்திருக்க வேண்டும். முயற்சிகள் எடுக்கும் போது தடைகள் சாத்தியம்தான். அவற்றைத் தடயங்களாக மாற்றுவது இலட்சிய மனிதனுக்கு அழகு.








All the contents on this site are copyrighted ©.