2010-05-24 15:44:53

திருத்தந்தை - மே 24 சீனத் திருச்சபைக்காகச் செபிக்கும் நாள்


மே24,2010 மே 24ம் தேதி திருச்சபை சிறப்பிக்கும் கிறிஸ்தவர்களின் சகாய அன்னை விழா பற்றியும் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இந்நாள் சீனத் திருச்சபைக்காகச் செபிக்கும் நாள் என்பதையும் விசுவாசிகளுக்கு நினைவுபடுத்தினார்.

சீனக் கிறிஸ்தவர்கள் தங்களுக்கிடையேயும் உலகளாவியத் திருச்சபையோடும் ஒன்றிப்புக்காகச் செபிக்கும் வேளை, உலகெங்கும் வாழ்கின்ற கத்தோலிக்கர்கள், சீனத் திருச்சபை மீது தூய ஆவியார் அபரிவிதமாகப் பொழியப்பட செபிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இன்னும், சனிக்கிழமையன்று இத்தாலியின் Benevento வில் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட 19ம் நூற்றாண்டு பொதுநிலை விசுவாசி Teresa Manganiello வின் புனித வாழ்வைப் புகழ்ந்து பேசினார் திருத்தந்தை.

1876ம் ஆண்டு இறந்த, 11 குழந்தைகளுக்குத் தாயான தெரேசா, பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையைச் சேர்ந்தவர். சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பிரான்சிஸ்கன் ஆன்மீகத்தை வாழ்க்கையில் வெளிப்படுத்தியவர்.

 








All the contents on this site are copyrighted ©.