2010-05-24 15:45:52

திருத்தந்தை- தலத்திருச்சபைகள் அகிலத் திருச்சபையுடன் எப்பொழுதும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்


மே24,2010 இஞ்ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் தூய ஆவியார் பெருவிழாத் திருப்பலியை நிகழ்த்திய திருத்தந்தை, தலத்திருச்சபைகள் அகிலத் திருச்சபையுடன் எப்பொழுதும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்று உரைத்தார்.

தூய ஆவி கடவுளின் புதிய மற்றும் வல்லமைமிக்க தொடர்பாளராய் இருக்கிறார் என்றும், கடவுளின் பணி ஒன்றிப்பை ஏற்படுத்துவதே என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை

பெந்தக்கோஸ்து நாள் தொடங்கி திருச்சபை அனைத்து மொழிகளையும் பேசுகிறது, அகிலத் திருச்சபை, தலத்திருச்சபைகளுக்கு முந்தியதாக இருக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, திருச்சபை ஒருபொழுதும் அரசியல், இன மற்றும் கலாச்சார எல்லைகளுக்குக் கட்டுப்பட்டதல்ல, அது தன்னை நாடுகளோடு வைத்து குழப்பிக் கொள்வதில்லை, ஏனெனில் அது எல்லா மனித எல்லைகளையும் கடந்தது என்பதையும் தெளிவுபடுத்தினார்.

தூய ஆவியார் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு விசுவாசிகள் பயப்படத் தேவையில்லை என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.