2010-05-24 16:00:36

தாய்லாந்தின் காயங்களை ஆற்றும் பணி உடனடியாகத் துவக்கப்பட வேண்டும் என்கிறது தலத்திருச்சபை


மே 24, 2010. தாய்லாந்தில் பல நாட்களான அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின் அமைதி மெதுவாகத் திரும்ம்பி வரும் இவ்வேளையில், நாட்டின் காயங்களை ஆற்றும் பணி உடன்டியாகத் துவக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

அண்மை போராட்டங்களில் வெற்றி பெற்றவர்கள் என்று எவருமே இல்லை, அனைவருமே இழப்பைச் சந்தித்துள்ளார்கள் என்ற ஆயர் Banchong Chaiyara, கோபம் மற்றும் வலியினிடையேயும் கூட குணப்படுத்தல் என்பது தொடரவேண்டும் என அழைப்பு விடுத்தார்.

பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்து தரப்பினரின் முயற்சிகளுக்கும் கத்தோலிக்கர்களின் ஜெபத்திற்கும் அழைப்பு விடுத்தார் ஆயர்.

இம்மாதம் 14ந்தேதி முதல் தாய்லாந்தில் அரசியல் வன்முறைகளால் 52பேர் உயிரிழந்துள்ளனர், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்







All the contents on this site are copyrighted ©.