2010-05-21 15:02:29

மே 22. நாளும் ஒரு நல்லெண்ணம்.


ஒழுக்கம் பற்றி கூறாத அறநூல்களே உலகில் இல்லை. வேதங்கள் அனைத்துமே மனித இனத்திற்குத் தேவையான பல்வேறு நல்லொழுக்க நெறிகளைத்தான் வலியுறுத்துகின்றன. இந்த ஒழுக்க நெறிதானே விலங்கினின்று மனிதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.

இந்த வேறுபாட்டை நாம் நம்மில் எப்படி வெளிப்படுத்தப் போகின்றோம் என்பதே கேள்வி.

உயிரினத் தொகுதிகள் வசிக்கும் இடங்களைச் சுற்றி நிலவுகின்ற தன்மை அல்லது சூழ்நிலையாம் சுற்றுச் சூழல் குறித்து நம் நிலைப்பாடு என்ன.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பதற்கு நாம் தரும் அர்த்தம் என்ன.

இயற்கையைப் பயன்படுத்திக் கொள்ளாமல் மனிதனால் வாழவே முடியாது.

அக்கால மனிதனும் இயற்கை வளங்களை, ஆற்றல்களை அழித்தான்.

ஆனால் அழித்த ஆற்றலைப் புதுப்பித்தலையும் செய்து கொண்டு இருந்தான். மரங்களை அழித்து வீடுகளைக் கட்டிக் கொண்ட மக்கள் வெட்டிய மரங்களையும் வளர்க்கத் தவறவில்லை.

இன்றைய மக்கள் வீடுகள் கட்டுவதற்குக் காடுகளையும், விளை நிலங்களையும், ஏரிகளையும் அழிக்கின்றனர். அதற்கு ஈடாக மரங்களையும் விளை நிலங்களையும் ஏரிகளையும் நாம் கட்டுகின்றோமா.

அதற்கு நம்மிடம் நிலம் மீதியுள்ளதா.

சிந்திப்போம். செயல்படுவோம்.








All the contents on this site are copyrighted ©.