2010-05-20 14:58:23

மங்கோலியா நாட்டு வளர்ச்சியில் திருச்சபை ஆழ்ந்த அக்கறைக் கொண்டுள்ளது என்கிறார் பாப்பிறை.


மே 20, 2010. கடந்த ஆண்டு மங்கோலியா பகுதியில் இடம்பெற்ற பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதுடன் தட்ப வெப்ப நிலை மாற்றம் போன்ற உலகளாவியப் பிரச்னைகள் சர்வதேச அளவில் முன்வைக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

திருப்பீடத்திற்கான மங்கோலியாவின் புதிய தூதுவர் Luvsantseren Orgil டமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, மங்கோலியாவின் கத்தோலிக்கர்கள் பொதுவாழ்வில் முழுமையான பங்கு கொண்டு பொது நலனுக்கான தங்கள் பங்கை என்றும் ஆற்றுவார்கள் என்றார்.

மிகவும் பின் தங்கிய மக்கள் மீதான அக்கறை, ஒருமைப்பாடு, மதிப்பு போன்றவைகளில் இளையோருக்கு கல்வி கற்பித்து உருவாக்குவதில் தலத்திருச்சபை ஆழ்ந்த அக்கறைக் கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டி உறுதியளித்தார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.