2010-05-19 15:59:57

பாங்காக் வன்முறைக்குத் தப்பித்து வரும் மக்களுக்கு கத்தோலிக்கத் திருச்சபை ஆதரவு


மே19,2010 தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை முடக்கிப் போட்டுள்ள வன்முறைக்குத் தப்பித்து வரும் மக்களுக்கு அந்நாட்டுத் தலத்திருச்சபை கத்தோலிக்க ஆலயங்களையும் பள்ளிகளையும் திறந்து விட்டுள்ளது.

இம்மாதம் 14ம் தேதி தொடங்கிய, தாய்லாந்து அரசுக்கு எதிரானக் கலவரத்தில் ஈடுபட்டுள்ள புரட்சியாளர்களை ஒடுக்குவதற்கான இராணுவ நடவடிக்கையில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 பேர் காயமடைந்துல்ளனர்.

இவ்வன்முறைகளால் வாகனச் சக்கரங்கள் எரிப்பிலிருந்து கிளம்பும் புகை, மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகத் தடை, செல்லிட தொலைபேசிகள் துண்டிப்பு போன்றவற்றை எதிர் கொள்ளும் அப்பாவி பொது மக்களுக்கு ஆலயங்களும் பள்ளிகளும் திறந்து விடப்பட்டுள்ளன, மக்கள் இவ்விடங்களில் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று பங்குத்தந்தை Sirichai Laukobkul தெரிவித்தார்.

இதற்கிடையே, தாய்லாந்து இராணுவம் பாங்காக்கிலுள்ள புரட்சியாளர்கள் முகாம்களைக் குண்டுவைத்து தாக்கியதைத் தொடர்ந்து அரசுக்கெதிரான நான்கு புரட்சிக் குழுக்களின் தலைவர்கள் இப்புதனன்று காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன







All the contents on this site are copyrighted ©.