2010-05-19 16:01:59

பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சுமார் ஆறுகோடிச் சிறாரின் நெருக்கடிகள் அகற்றப்படுவதற்குப் யூனிசெப் அழைப்பு


மே19,2010 உலகில் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சுமார் ஆறுகோடி மறக்கப்பட்ட சிறாரின் நெருக்கடிகள் அகற்றப்படுவதற்குப் பெரும் முயற்சிகள் எடுக்கப்படுமாறு யூனிசெப் அமைப்பின் புதிய இயக்குனர் Anthony Lake அழைப்பு விடுத்துள்ளார்.

உலகில் எல்லாருக்கும் ஆரம்பக் கல்வி என்ற இலக்கை எட்ட வேண்டுமென்பதற்கான காலக்கெடு முடிவதற்கு இன்னும் ஐந்தாண்டுகளே இருக்கும் வேளை பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சிறார் மீது கவனம் செலுத்துமாறு அவர் கூறினார்.

செனகல் நாட்டு டாக்கரில் நடைபெற்ற UNGEI கருத்தரங்கில் இச்செவ்வாயன்று தொடக்கவுரையாற்றிய Lake, இப்போதைய நிலை நீடித்தால் 2015ம் ஆண்டில் ஏறக்குறைய 5 கோடியே 60 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கக்கூடும் என்று எச்சரித்தார்..

UNGEI என்ற ஐ.நா.வின் சிறுமிகள் கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பத்தாம் ஆண்டை முன்னிட்டு இக்கருத்தரங்கு டாக்கரில் நடைபெற்றது.








All the contents on this site are copyrighted ©.