2010-05-19 15:58:14

இந்தியா- மாவோயிட்ஸ்கள் வன்முறைக்குத் திருச்சபை கண்டனம்


மே19,2010 மத்திய இந்தியாவில் 50 காவல்துறையினரையும் பொதுமக்களையும் ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றை மாவோயிட்ஸ்கள் வெடி வைத்து தாக்கியதற்குத் திருச்சபை அதிகாரிகள் தங்களது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

Raipur க்குத் தெற்கே சுமார் 450 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தப் பேருந்து சென்ற வழியில் மிதிவெடி வைக்கப்பட்டதில் 15 அப்பாவி பொது மக்கள், 16 காவல்துறையினர் என 31 பேர் இறந்தனர்.

இச்சம்பவம் இடம் பெற்ற பகுதியிலுள்ள, சட்டீஸ்கார் மாநிலத்தின் Jagadalpur பங்குக்குரு Abraham Maliekal பேசிய போது இதில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது பரிதாபத்துக்குரியது என்று கவலை தெரிவித்தார்.

திருச்சபை அனைத்துவிதமான வன்முறைகளையும் கண்டிக்கிறது என்றுரைத்த அக்குரு, ஒவ்வொருவரும் தங்களது கருத்து வேறுபாடுகளைக் களைந்து சமூக அமைதிக்காக உழைக்குமாறு கேட்டுள்ளார்.

மாவோயிட்ஸ்கள் என அழைக்கப்படும் தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் நக்சலைட்டுகள் இந்த வன்செயலைச் செய்தனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.