2010-05-18 15:25:46

குழந்தைகளைக் காப்பாற்ற தலத்திருச்சபையின் ஒத்துழைப்பு


மே18,2010 மத்தியப் பிரதேசத்தில் சத்துணவுக்குறைவால் குழந்தைகள் இறப்பதை தடுத்து நிறுத்த தல அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அம்மாநில திருச்சபை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சத்துணவின்மையால் மத்தியப்பிரதேசத்தில் ஒவ்வொரு நாளும் 83 குழந்தைகள் உயிரிழப்பதாக அரசு வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டிய உஜ்ய்ன் ஆயர் செபஸ்தியான் வடக்கெல், குழந்தைகளை காப்பாற்ற அனைத்துத் துறைகளோடும் இணைந்து பணியாற்ற உள்ளதாகத் தெரிவித்தார். ஒவ்வோர் ஆண்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் போதிய உணவு மற்றும் நீர் இன்றி உயிரிழக்கும் நிலையில் அதனைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து உழைப்பதே பலன் தருவதாக இருக்கும் என்றார் ஆயர்.

குழந்தைகளின் பெருமளவான இறப்புகளுக்கான முக்கியக்காரணங்களான சமூகப்பிரச்னைகள் என பாலர் திருமணம், வரதட்சணை முறைகள், விவசாய நிலம் குறைதல், ஏழ்மை ஆகியவைகளைச் சுட்டிக்காட்டியுள்ள தலத்திருச்சபைத் தலைவர்கள், வாழ்வு ஆதாரத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய நேரம் வந்துள்ளது என்றனர்.








All the contents on this site are copyrighted ©.