2010-05-18 15:26:00

HIV மற்றும் AIDS நோயாளிகளிடையே பணிபுரியும் கத்தோலிக்கப் பணியாளர்களின் அனுபவப் பகிர்வு.


மே18,2010 HIV மற்றும் AIDS நோயாளிகளிடையே ஆசிய பசிபிக் பகுதியில் பணிபுரியும் கத்தோலிக்க பணியாளர்கள் தங்கள் அனுபவங்களை ஒன்றிணைத்து இப்பணியில் ஒருவருக்கொருவர் உதவவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.



தாய்லாந்தில் இடம்பெற்ற கத்தோலிக்க அமைப்புகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இத்தீர்மானம், ஆசிய பசிபிக் பகுதி கத்தோலிக்கப் பணியாளர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்வதற்கான தொடர்பு பன்வலை ஒன்றை உருவாக்க வழிவகுத்துள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், மியான்மார், பிலிப்பீன்ஸ், தென் கொரியா, திமோர், வியட்னாம் உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த கத்தோலிக்கப் பணியாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கத்தோலிக்க காரித்தாஸ், CRS மற்றும் CAFOD உதவி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்தோனேசியா, பாப்புவா நியூ கினி, பிலிப்பீன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகளில் HIV பாதிப்பு அதிகரித்து வருவது மற்றும் கம்போடியா, மியான்மார், தாய்லாந்து நாடுகளில் இப்பாதிப்புகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.