2010-05-17 15:38:04

புனித பூமிக்கு பயணம் செய்யும் திருப்பயணிகள் பாலஸ்தீனிய மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது ப்ரோட்டஸ்டாண்ட் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று.


மே17,2010 நம் மத உணர்வுகளின் உந்துதலாக அதனை நிறைவேற்றச் செல்லும் கிறிஸ்தவர்கள், அதனை அமைதியின் திருப்பயணமாக மாற்றி பாலஸ்தீனியர்களின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார பிரச்னைகளில் அக்கறைக் கொண்டவர்களாக செயல்படவேண்டும் எனவும் இத்திருப்பயணிகள் அமைப்பு அழைப்பு விடுத்தது.

நம் திருப்பயணங்கள் புனித பூமியின் அமைதிக்கு பங்காற்றுகின்றனவா அல்லது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அநீதிக்கு உதவுகின்றனவா என்பது குறித்து சிந்திக்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளது இக்குழு.

2008ம் ஆண்டில் மட்டும் 27 இலட்சம் பேர் இஸ்ராயேலில் திருப்பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள இந்த பொரோட்டஸ்டாண்ட் அமைப்பு, சுற்றுலா மூலம் வந்த வருவாய் அனைத்தும் இஸ்ராயேலின் கருவூலத்திற்கு சென்றுள்ளதேயன்றி அதனால் புனித பூமி பகுதியின் அமைதிக்கு எவ்வித லாபமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

புனித பூமிக்கு திருப்பயணிகளாகச் செல்வோர், பாலஸ்தீயர்களின் பொருளாதாரத்திற்கு உதவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் இவ்வமைப்பால் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.