2010-05-15 15:37:23

பெண்கள் எதிர்நோக்குகின்ற வன்முறைகள் அகற்றப்படுவதற்கு விளம்பரதாரர்கள் உதவ ஐ.நா.வேண்டுகோள்


மே15,2010 பெண்கள் எதிர்நோக்குகின்ற வன்முறைகள் அகற்றப்படுவதற்கான ஐ.நா.வின் நடவடிக்கைகளில் விளம்பரதாரர்களும் இணையுமாறு ஐ.நா.உயர்மட்ட அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.

ஏறத்தாழ 70 விழுக்காட்டுப் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வன்முறையை அனுபவிக்கின்றனர் என்று மாஸ்கோவில் நடைபெற்ற விளம்பதாரர்களுடனான கூட்டத்தில் எடுத்துரைத்தார் ஐ.நா.வின் பொதுத் தகவலுக்கான நேரடிப் பொதுச் செயலர் Kiyo Akasaka.

பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்ற பாலினச் சமத்துவமின்மையைக் களைவதற்கு விளம்பரதாரர்கள் உதவுமாறு கேட்டுக் கொண்டார் Akasaka.

தாக்கப்படாமல், பாலியல் பலாத்காரம் செய்யப்படாமல், கற்பழிக்கப்படாமல் பாலின வியாபாரத்தில் கட்டாயமாக நுழைக்கப்படாமல் இருக்க விரும்பும் பெண்களின் போராட்டத்திற்கு விளம்பரதாரர்கள் உதவுமாறு அவர் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.