2010-05-15 15:35:47

கிறிஸ்தவர்கள் கிழக்கில் தொடர்ந்து வாழவேண்டுமாயின் அவர்கள் மறைசாட்சிய வாழ்வுக்கு தயாராக இருக்க வேண்டும் - பிதாப்பிதா மிஷேல் சாபா


மே15,2010 கிறிஸ்தவர்கள் கிழக்கில் தொடர்ந்து வாழவேண்டுமாயின் அவர்கள் மறைசாட்சிய வாழ்வுக்கும் புனித வாழ்வு வாழ்வதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று எருசலேமின் முன்னாள் இலத்தீன்ரீதி பிதாப்பிதா மிஷேல் சாபா கூறினார்.

கீழைரீதி கிறிஸ்தவர்களின் எதிர்காலம் என்ற தலைப்பில் பெய்ரூட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய பிதாப்பிதா சாபா, லெபனனில் கிறிஸ்தவர்கள் துன்புறுவது போன்று, மனிதரால் செய்யக்கூடிய அத்தனை செயல்களையும் செய்த பின்னர் உயிரைக் கொடுக்கும் மறைசாட்சிய வாழ்வுக்கு அவர்கள் தங்களைக் கையளிக்க வேண்டியிருக்கிறது என்றுரைத்தார்.

வருகிற அக்டோபரில் வத்திக்கானில் “மத்திய கிழக்குப் பகுதியில் திருச்சபையும் அதன் சாட்சிய வாழ்வும்” என்ற தலைப்பில் அப்பகுதிக்கான சிறப்பு ஆயர் மாமன்றம் நடைபெறவுள்ளது.

இந்தத் தலைப்பை மையமாக வைத்துப் பேசிய பிதாப்பிதா மிஷேல் சாபா, முதல் உலகப் போர் காலத்திலிருந்தே மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களுக்குப் பிரச்சனைகள் தொடங்கிவிட்டன, அவர்கள் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையேயான கருத்துக்கோட்பாடுகளில் அகப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.