2010-05-15 15:36:36

கலிலேயா கடலில் இரண்டு ஆண்டுகளுக்கு மீன்பிடிப்பதைத் தடைசெய்துள்ளது இஸ்ரேல் அரசு


மே15,2010 மீன்களைப் பாதுகாக்கும் நோக்கத்தில் கலிலேயா கடலில் இரண்டு ஆண்டுகளுக்கு மீன்பிடிப்பதைத் தடைசெய்துள்ளது இஸ்ரேல் அரசு.

சுத்தத் தண்ணீர் ஏரிகள் குறித்து ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், சிறிய வலைகளைப் போட்டு மீன்பிடிப்பவர்கள் பெருமளவான சிறிய மீன்களைப் பிடிக்கின்றனர், அண்மை ஆண்டுகளில் கலிலேயாக் கடலிலிருந்து 80 விழுக்காடு வரை சிறிய மீன்களைப் பிடித்துள்ளனர் என்று கூறுகின்றனர்.

2005ம் ஆண்டளவில் ஏறத்தாழ 300 டன்கள் இராயப்பர் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விவிலியக் காலம் தொட்டு மீனவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கலிலேயாக் கடல் வாழ்வு ஆதாரமாக இருந்து வருகிறது.

இஸ்ரேல் அரசின் இந்தத்தடை சுற்றுலாப் பயணிகளின் படகுப்பயணத்துக்குத் தடையாக இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.