2010-05-14 15:32:26

மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கருத்துக்கோட்பாட்டுப் போரின் வார்த்தைகளால் மறைசாட்சிதனத்தை எதிர்நோக்குகிறார்கள் – ஆஸ்திரேலிய ஆயர்


மே14,2010 மேற்கத்திய உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் கருத்துக்கோட்பாட்டுப் போரின் வார்த்தைகளால் மறைசாட்சிதனத்தை எதிர்நோக்குகிறார்கள் என்று ஓசியானியா ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவர் ஆயர் பீட்டர் இங்ஹாம் கூறினார்.

ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, பாப்புவா நியுகினி, சாலமன் தீவுகள் மற்றும்பிற பசிபி்க் நாடுகளின் ஆயர்கள் பேரவைகளின் கூட்டமைப்பின் தலைவரான ஆஸ்திரேலியாவின் வுலோன்காங் ஆயர் இங்ஹாம், இந்த மேற்கு உலகின் விசுவாசிகள் ஒருகாலத்தில் சிங்கங்களுக்கு உணவாகப் போடப்பட்டார்கள், தலைவெட்டப்பட்டார்கள், சிலுவையில் அறையப்பட்டார்கள், இவை போன்ற பல துன்பங்களை அனுபவித்தார்கள் என்று உரைத்தார்.

ஆனால், உடல்ரீதியான மரணதண்டனை எதிர்க்கப்படுவதால், கேலிக்கூத்துகள், ஏளனங்கள், பண்புகளைக் கொல்லுதல் போன்ற புதுவடிவ மறைசாட்சிதனத்தைத் தற்சமயம் அனுபவிக்கிறார்கள் என்றும் ஆயர் கூறினார்.

இந்தப் புதுவடிவத்தில் குருதிச் சிந்தப்படாவிட்டாலும் குருதியைச் சிந்துவது போன்ற கொடுமையுடையது என்றும் ஆஸ்திரேலிய ஆயர் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.