2010-05-14 15:32:55

புனித பூமியில் சுற்றுலா மேற்கொள்வதற்குக் கிறிஸ்தவர்கள் தார்மீக் கடமையைக் கொண்டுள்ளார்கள் - WCC அவை


மே14,2010 புனித பூமியில் புனித இடங்களையும் பழங்கால அமைப்புமுறைகளையும் பார்ப்பதற்காக அப்பகுதிக்குச் சுற்றுலா மேற்கொண்டாலும், சுதந்திரம், மனித மாண்பு, சமத்துவம், நீதி அமைதி ஆகியவற்றுக்கான அம்மக்களின் போராட்டத்திற்குச் சாட்சிபகரும் நோக்கத்தில் அங்கு சுற்றுலா மேற்கொள்வதற்குக் கிறிஸ்தவர்கள் தார்மீகக் கடமையைக் கொண்டுள்ளார்கள் என்று WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகளின் அவை கேட்டுக் கொண்டுள்ளது.

புனிதபூமியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இம்மாதம் 18 முதல் 21 வரை சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் WCC அவையினர் கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

பாலஸ்தீனாவுக்கு நீதியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் சுற்றுலா, மத்திய கிழக்குப் பகுதியிலும் அதற்கு வெளியிலும் அமைதி ஏற்பட உதவும் என்று Alternative Tourism Group என்ற அமைப்பின் இயக்குனர் Rami Kassis கூறினார்.








All the contents on this site are copyrighted ©.