2010-05-13 15:51:07

மே 14 நாளும் ஒரு நல்லெண்ணம்


ஓவியர் ஹெல்மன் வரைந்த, காண்பவரை மெய்சிலிர்க்க வைக்கும், “கடவுள், மூடியிருக்கும் கதவைத் தட்டிக் கொண்டிருப்பது” போன்ற ஓவியம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. தத்துவரூபமான அந்த ஓவியத்தைப் பார்த்த எல்லாரும் பரவசமடைந்தனர். ஆனால் ஒரேயொருவர் மட்டும் குறை சொன்னார் : “ஓவியத்தின் கதவில் சாவி இல்லையே. சாவியில்லாதக் கதவை எப்படித் திறப்பதாம்”? அதைக் கேட்ட ஹெல்மன் புன்னகையுடன் சொன்னார் : “தம்பி, சாவித்துவாரமும் சாவியும் வெளியில் இல்லை. உள்ளேதான் இருக்கிறது. உள்ளே இருக்கும் நீ தான் கதவைத் திறக்க வேண்டும்” என்று. ஓவியர் மேலும் சொன்னார் : “தரிசனம் கதவைத்தான் தட்டும். தரிசனம் பெற வேண்டியது நீர்தாம்” என்று.

ஆம். “அக்கம்பக்கத்தில் இல்லை அகவிடுதலை. அது உன் கையில் இருக்கிறது”








All the contents on this site are copyrighted ©.