2010-05-12 16:37:34

மே 13 வரலாற்றில் இன்று


மே 13 பாத்திமா அன்னை விழா

1648 - டில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.

1787 - ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக் கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு கப்பல்தலைவவர் ஆர்தர் பிலிப் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டார்.

1830 - ஈக்குவாடோர் விடுதலை அடைந்தது.

1880 - நியூஜெர்சியில் மென்லோ பூங்காவில் தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார்.

1888 - பிரேசில் அடிமைமுறையை ஒழித்தது.

1952 - இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.

1960 - உலகின் ஏழாவது உயர மலையான தவுளகிரியின் உச்சியை சுவிட்சர்லாந்து மலையேறிகள் இருவர் முதன் முதலில் அடைந்தனர்.

1967 - சாகிர் உசேன் இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனார்.








All the contents on this site are copyrighted ©.