2010-05-12 16:35:50

மே 13 நாளும் ஒரு நல்லெண்ணம்


ஒருமுறை கிரேக்க நாட்டில், உலகின் மிகப் பெரிய அறிவாளி யார் என்ற பெரிய ஆய்வு ஒன்று நடந்தது. அப்போது எல்லாரும் ஒருமித்த குரலில், “சாக்ரடீஸ்” என்று சொன்னார்கள். செய்தி சாக்ரடீசுக்கு எட்டியது. அவரும், தான் உண்மையிலேயே அறிவாளிதானா என்று கண்டுகொள்ள விரும்பினார். அதனால் உலகின் இதர அறிவாளிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஓர் அறிவாளி சாக்ரடீசிடம், உங்கள் அறிவின் இரகசியம் என்ன? நீங்கள் எப்படி அனைத்தும் அறிந்தவராக இருக்கிறீர்கள்? என்று கேட்டார். சாக்ரடீஸ் அடக்கத்துடன் பதில் சொன்னார்- மற்றவர்கள் தங்களுக்கு என்னென்ன தெரியும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். நானோ எனக்கு என்னென்ன தெரியாது என்று தெரிந்து வைத்திருக்கிறேன். அதுவே எனது அறிவின் இரகசியம் என்று.

ஆம். அறியாமை என்பது தெரியாமை அல்ல. தெரிந்து கொள்ள முயற்சிக்காமையே










All the contents on this site are copyrighted ©.