2010-05-12 16:26:38

இந்தியக் கிறிஸ்தவத் தலைவர்கள் மக்களின் ஆன்மீகத் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும் - அருட்பணி ஆனந்த் முட்டுங்கல்


மே12,2010 கிறிஸ்தவத் தலைவர்கள் மக்களின் ஆன்மீகத் தேவைகளில் கவனம் செலுத்தத் தவறினால் இந்திய ஆலயங்களும் மேலை நாடுளிலுள்ள ஆலயங்கள் போன்று காலியாக இருக்கக்கூடிய நிலை ஏற்படும் என்று போபால் மறைமாவட்ட அருட்பணியாளர் ஆனந்த் முட்டுங்கல் எச்சரித்தார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு நடத்திய மூன்றுவார தலைமைத்துவ பரிமாற்ற நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பியுள்ள அருட்பணி முட்டுங்கல் இப்புதனன்று நிருபர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.

இந்திய திருச்சபை, திருச்சபையின் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், மக்களின் மகிழ்விலும் துயரிலும் பங்கு கொண்டு அவர்களுக்குப் பணிபுரிய வேண்டும் என்றும் அக்குரு கூறினார்.

இம்மாதம் 7ம் தேதி நிறைவடைந்த இந்த நிகழ்வில் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட மூவரில் அருட்பணியாளர் ஆனந்த் முட்டுங்கல்லும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.