2010-05-11 16:56:17

கேரளாவில் ஆதரவற்ற சிறாருக்குப் பணியாற்றிய ஜெர்மன் நாட்டு அருட்சகோதரி Willigard Kultz யின் இறுதி அடக்கச்சடங்கில் நூற்றுக்கணக்கான இந்துக்களும் கலந்து கொண்டனர்.


மே11,2010 இந்தியாவின் கேரளாவில் ஆதரவற்ற சிறாருக்குத் தம் பணியை ஆற்றிய ஜெர்மன் நாட்டு அருட்சகோதரி Willigard Kultz யின் இறுதி அடக்கச்சடங்கு ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான இந்துக்கள் உட்பட ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

“அனாதைகளின் அன்னை” என அழைக்கப்படும் அருட்சகோதரி Kultz, புற்று நோயால் இறந்தார். இவரின் அடக்கச்சடங்கு இஞ்ஞாயிறன்று கன்னூர் மாவட்டத்தில் இடம் பெற்றது.

இந்த அடக்கச்சடங்கு திருப்பலியை நிகழ்த்திய கன்னூர் ஆயர் Varghese Chakkalakal, இந்த அன்னையின் விருப்பப்படி நூற்றுக்கணக்கான அனாதைச் சிறார் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் இவரது உடல் புதைக்கப்பட்டது என்று கூறினார்.

1931ம் ஆண்டு மே 26ம் தேதி ஜெர்மனியில் பிறந்த அருட்சகோதரி Willigard Kultz, ஜெர்மனியில் மருத்துவமனை ஒன்றில் தாதியராக வேலை செய்த சமயத்தில் கேரளாவை மையமாகக் கொண்ட ஏழைகளின் சகோதரிகள் சபையில் 1975ம் ஆண்டு சேர்ந்தார்.








All the contents on this site are copyrighted ©.