2010-05-10 16:21:45

மே 10 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1503 - கிறிஸ்டோபர் கொலம்பஸ் கேமான் (Cayman) தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் (Las Tortugas) எனப் பெயரிட்டார்.

1612 - ஷாஜகான் மன்னன் மும்தாஜைத் திருமணம் புரிந்தான்.

1857 - இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் சிப்பாய்கள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.

1908 - அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வெர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது. 1946 - ஜவஹர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.

1979 - மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன.

1994 - நெல்சன் மண்டேலா தென்னாப்ரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்.

1996 - எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்ற கடும் புயலில் சிக்கி 8 மலையேறிகள் இறந்தனர்.








All the contents on this site are copyrighted ©.