2010-05-08 16:09:19

பெல்ஜியத் திருச்சபை, ஒருவர் மற்றவருக்குச் செவிமடுத்தல், ஒன்றிப்பு, பொது செபம் போன்றவற்றில் உறுதிப்படுத்தப்படுவதற்கு அட் லிமினா சந்திப்பு, மிகவும் உதவியாக இருக்கும் – திருத்தந்தை நம்பிக்கை


மே08,2010 பெல்ஜியத் திருச்சபை, ஒருவர் மற்றவருக்குச் செவிமடுத்தல், ஒன்றிப்பு, பொது செபம் போன்றவற்றில் உறுதிப்படுத்தப்படுவதற்கு, குறிப்பாக, அத்திருச்சபை பாவத்தினால் சோதிக்கப்பட்ட இந்தக் காலங்களில் இவற்றில் ஆழப்படுத்தப்படுவதற்கு இந்த அட் லிமினா சந்திப்பு மிகவும் உதவியாக இருக்கும் என்ற தமது நம்பிக்கையை தெரிவித்தார் திருத்தந்தை.

ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை பாப்பிறையைச் சந்திக்கும் அட் லிமினாவை முன்னிட்டு இச்சனிக்கிழமை பெல்ஜிய நாட்டு ஆயர்களை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

மறைக்கல்வி, பணிக்குருத்துவம், இறையழைத்தலை ஊக்குவித்தல், பொதுநிலை விசுவாசிகளை உருவாக்குதல் போன்றவைகளின் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டிய அவர், அனைத்து அருட்பணியாளர்கள், இருபால் துறவிகள் மற்றும் பொதுநிலையினரைத் தான் ஊக்கப்படுத்துவதாகவும் கூறினார்.

பெல்ஜிய நாட்டுப் புனிதரும் தொழுநோயாளிகளின் பாதுகாவலருமான புனித தமியான் பற்றியும் பேசிய திருத்தந்தை, இந்தச் சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டில் அனைவரும், குறிப்பாக அருட்பணியாளரும் துறவிகளும் இப்புனிதரின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி வாழுமாறு கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.