2010-05-08 16:09:53

ஒரிசா கிறிஸ்தவர்கள் தங்களது மறைப்பணிகளால் சமுதாயத்தில் அவர்களின் இருப்பை உணர்த்தி வருகிறார்கள் -ஆயர் திருத்தலில்


மே08,2010 இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் மற்றும் கொலைகள் இடம் பெற்றிருந்த போதிலும், அம்மாநிலக் கிறிஸ்தவர்கள் தங்களது மறைப்பணிகளால் சமுதாயத்தில் அவர்களின் இருப்பை உணர்த்தி வருகிறார்கள் என்று அம்மாநல ஆயர் தாமஸ் திருத்தலில் Thomas Thiruthalil கூறினார்.

ஒரிசா மாநிலத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அங்கு கத்தோலிக்கரின் செயல்பாடுகள் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த, அம்மாநில ஆயர் பேரவைத் தலைவரான பாலாசோர் Balasore ஆயர் திருத்தலில் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் கந்தமால் மாவட்டத்தில் இந்து தீவிரவாதிகளால் கட்டவிழ்க்கப்பட்டிருந்த கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள், திருச்சபையின் அன்பு, பிறரன்பு தொண்டு ஆகிய உணர்வுகளை அமுக்கிவிடவில்லை என்று கூறினார் ஆயர் திருத்தலில்.

அருட்பணியாளர்களும் அருட்சகோதரிகளும் பொதுநிலை விசுவாசிகளும் கல்வி, சுகாதாரம் சமூகவளர்ச்சி ஆகிய பணிகளின் மூலம் உள்ளூர் மக்களுடன் நல்ல உறவை வளர்த்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

கந்தமால் மாவட்டத்தில் இந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகளால் ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.