2010-05-08 16:10:27

எந்தவொரு பெண்ணும் தாய்மைப் பேறு காலத்தில் இறக்க அனுமதிக்கக் கூடாது – பான்


மே08,2010 ஆண்டுதோறும் குழந்தை பிறப்பின் போது பல்லாயிரக்கணக்கான தாய்மார் இறக்கும் வேளை, உலகில் எந்த ஒரு தாயும் இந்தச் சூழலில் இறப்பதற்கு அனுமதிக்கப்படக் கூடாது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.

பல நாடுகளில் மே9, இஞ்ஞாயிறன்று அன்னையர் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, Zaman என்ற துருக்கித் தினத்தாளுக்கு எழுதிய கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளார் பான் கி மூன்.

இந்த இறப்புக்களில் 99 விழுக்காடு வளரும் நாடுகளில் இடம் பெறுகின்றது. சில நாடுகளில் குழந்தை பிறப்பின் போது 8 தாய்மார்க்கு ஒருவர் வீதம் இறக்கின்றனர் என்றும் குழந்தை பிறப்பின் போதான இந்த இறப்புகள் பெரும்பாலும் 15க்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமித்தாய்களில் இடம் பெறுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.