2010-05-08 16:09:09

இந்தியாவின் புதிய திருப்பீட தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ


மே08,2010 இந்தியாவின் புதிய திருப்பீடத் தூதராகப் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோவை (Salvatore Pennacchio) இச்சனிக்கிழமை நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இத்தாலியின் மரனோவில் (Marano) 1952ம் ஆண்டு பிறந்த பேராயர் பென்னாக்கியோ, 1976ல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1998ல் ஆப்ரிக்காவின் ருவாண்டா நாட்டிற்குத் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டார்.

பின்னர், 2003ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி தாய்லாந்து, சிங்கப்பூர், கம்போடியா ஆகிய நாடுகளுக்கானத் திருப்பீட தூதராகவும், மியான்மார் லாவோஸ் மலேசியா புருனெய் ஆகிய நாடுகளுக்கு அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார்.

இச்சனிக்கிழமை பேராயர் பென்னாக்கியோ, இந்தியாவின் புதிய திருப்பீட தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதுவரை தாய்லாந்து, சிங்கப்பூர், கம்போடியா ஆகிய நாடுகளுக்கானத் திருப்பீட தூதராகவும், மியான்மார் லாவோஸ் மலேசியா புருனெய் ஆகிய நாடுகளுக்கு அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியாகவும் பணியாற்றி வந்தார்.

இதுவரை, இந்தியாவின் திருப்பீடத் தூதராக ஸ்பெயின் நாட்டவரான பேராயர் Pedro Lopez Quintana பணியாற்றினார். பேராயர் லோப்பெஸ் குயின்தானா, 2003ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி, அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் நம்பிக்கைச் சான்றிதழைச் சமர்ப்பித்தார்.








All the contents on this site are copyrighted ©.